Thursday, October 29, 2009

MAHA SANNIDHANAM - மகாசன்னிதானம்



















பரபரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன்வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும்தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதேஏங்கி இளையா திரு.

ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீ சீ
சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்
மனமே உனக்கென்ன வாய்.



தருமை ஆதீனம்
சைவதமிழ் வளர்த்துக்கொண்டிருக்கும் பழமையான மடங்களில் தருமை ஆதீனம் முக்கியத்துவம் வாய்ந்தது!17ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட குருஞான சம்பந்த குருமூர்த்தி சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சைவ மடம், தெய்வத்தமிழ் மன்றம் நிறுவி சைவதமிழ் வளர்த்து வருவதோடு, தமிழ் திருமுறைகளையும்,சைவ சமயம் தொடர்பான நூல்களையும் கடந்த 1941 முதல், மூலம் மற்றும் விளக்க உரையுடன் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது.
நேர்த்தியாக திட்டமிடப்பட்ட நான்கு வீதிகளை மையமாக வைத்து அமைந்த திருக்கோயில், அருகிலேயே ஆதீன மடம் அதனுள் அமைந்த சொக்கநாதர் பூஜைமடம்.
மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து தரங்கம்பாடி சாலையில் சென்றால் சரியாக மூணாவது கி.மீல் இடது பக்கம் அலங்கார வளைவுடன் ஆரம்பிக்கும் தருமபுரத்தின் எல்லை! சாலை வழியே செல்பவர்களின் கண்களையும் மனதையும் கவரும் வகையிலான அமைதிருக்கிறது.
அலங்கார வளைவுக்கு நேர் எதிரே ஒரு தோட்டம் அதன் அருகிலே தற்போது ஆதீனத்தின கல்லூரி செய்ல்பட்டுக்கொண்டிருக்கிறது! எதிரே குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி,பள்ளி மைதானமென பெரிய பரப்பளவில் அமைதிருக்கிறது.
ஆதீன பங்களாவிலிருந்து தொடங்கும் மேலவீதி நேரே சென்றால் இடது புறத்தில் ஆனந்தபரவசர் குருமூர்த்தம் பெரிய தோட்டங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது! மேலவீதியின் முடிவில் துவங்கும் வனதுர்க்கை கோயிலுக்கு செல்லும் பாதை, உள்ளே சென்றால் பார்க்கும் தூரம் வரையில், விளை நிலங்களில் காவிரியின் கொடையில் பச்சை பசேலாக இருந்த்து இப்போது பம்பு செட் உதவியுடன்..! வடக்கு வீதியை மத்திய பகுதியில் ஒரு நுழைவாயில் இடதுபக்கம் 100 மீ தூரம் சென்றால் காவிரியை அடையலாம் வழியில் குருமூர்த்தம், இங்கு மாசில்லாமநிதேசிகர் உள்பட பல குருமூர்த்தம் உள்ளது.
வலதுபக்கமாக சென்றால் அலங்கார வளைவு சிறிது சென்றால் யானை கொட்டகை அதை தாண்டி சென்றால், வெளியே காவல் காக்கும் விதமாக ஒரு புள்ளையார் கோவில்!
ஆதீன கல்லூரி முன்பு செயல்பட்டு வந்தது . வினாயகரை வணங்கி உள்ளே சென்றால் தர்மபுரிஸ்வரர் கோவில் , எமதர்மன் சன்னதி அவரை தரிசித்து பிரகாரம் சுற்றி வந்தால் துர்க்கையம்மன் சன்னதி கருவறையின் முன்னால் சிறிய ஃபவுண்டைன் ! அதையொட்டி துர்க்கையம்மன் சந்நிதி,வெள்ளிகிழமைகளிலும் ஞாயிற்றுகிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும் நிறைய பக்தர்கள் வருவார்கள் .வருடந்தோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் குருபூசை விழாவில் மடத்தினுள் அமைந்திருக்கும் ஞானபுரிஸ்வரர் சன்னதியில் 108 சிவனடியார்கள் சிவபூஜை செய்து வழிபாடு செய்வர்கள். மற்றுமொரு சிறப்பு கஜபூஜை என சொல்லப்படும் யானைகளுக்கான சிறப்பு பூஜை!
தருமை ஆதீனத்தின் கட்டுப்பாடின் கீழ் 27 பெரிய கோவில்களும் மற்றும் சிறியகோவில்கள்,உள்ளன. தருமபுர ஆதீனம் பெரிய இடத்தை வரும் மக்கள் பயன்படுத்திகொள்ள வசதியாக சிறப்பாக வைத்துள்ளது

3 comments:

  1. His Holiness Sri la Sri Dharumai Aadheenam Gurumahaasannithaanam.....

    Today in the 21st century, Lord God Shiva showers his blessing on the people from Dharumai Aadheenam Through "Thathuva Gnaani " Divine GURU His Holiness Sri la Sri Dharumai Aadheenam Gurumahaasannithaanam........

    "தத்துவ ஞானி" தெய்விக திரைப்படத்தில்

    சிவ - சக்தி அருள் பாலிக்கும் ஒவ்வொரு காட்சியும், தருமையாதீன ஸ்ரீல ஸ்ரீ குருமகா சந்நிதானம் ஸ்வாமிகள் உங்களது ஆன்மிக ,வாழ்வியல் கருத்துக்களும்

    உலகம் முழுதும் இன்று அல்லல் பட்டு மன அமைதியில்லா வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் மனித வாரிசுகளுக்கு உண்ணதமான் பாடமாக அமையும்

    ஆகையால் உங்களது வாழ்வியல் கருத்துக்கள் உள்ள இந்த தெய்விக திரைப்படம் தான் இனி இந்த நுற்றாண்டில் வாழும் இளைய சமுதாயத்த்திர்க்கு பாடம் ......
    தன்னை அறிந்து சொர்க்க வாழ்க்கைவாழ உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தெய்விக குரு அவசியம் ..இறைவனை- - மனிதனுக்குள் இருக்கும் இறைத்தன்மையை - மனிதனுக்கு அடையாளம் காட்டுவது ஒரு தெய்விக குரு அவர்களால் மட்டுமே முடியும்,அதனை நமது படங்கள் சுவாமிகள் உங்கள் மூலமாக உணர்த்தும் ......

    நான் ஒரு கருவி .....
    ஆகையால் உங்களது கருத்துக்களை எனக்கு அறிவித்து ஆவன செய்ய வேண்டுகிறேன் .................
    நன்றி வணக்கம் ...

    yours reverently
    Shiva Prem ( பிரேமவன் )
    “Divine” Film Director / Cinematographer,
    New # 25,Alwarpet street ,Alwarpet,Chennai-18.Tamil Nadu,India..
    Cell-+91 944 44 52 167
    directorshivaprem@gmail.com --- premavan@gmail.com


    http://www.youtube.com/user/MrPremavan

    http://twitter.com/directorprem
    http://en.netlog.com/premavan

    ReplyDelete
  2. ஞானசம்பந்தம்
    மாத இதழ் வேண்டும் ஐயா.
    அதற்கான விவரங்களை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

    ReplyDelete